வாழ்க உறவுகள் .,
தண்ணீர் ...இன்றைய சூழலில் கீழ்த்தட்டு மக்கள் தாகம் தீர்க்க , ஒரு குடம் தண்ணீருக்கே தெருத்தெருவாய் கிணறு, குளமென அலையும் நிலை.(மேல் மட்டத்தினரும் இந்தத் தாக்கத்தை உணரத் தொடங்கிவிட்டனர். ) அதுவும் அதளப் பாதாளத்திலிருந்துதான் எடுக்க வேண்டும்
. அப்படிக் கிடைக்கும் நீரும் சுத்தப் படுத்தாமல் வடிகட்டாமல் குடிக்கும் தரத்தில் இருப்பதில்லை
.உடல் நலத்தைக் கெடுக்கும் காரணிகள் பல இதில் கலந்திருப்பதை பெரும்பான்மையானோர் அறியாமல் உட்கொள்வதால் (பெரும்பாலும்) கிராமப்பகுதிகளில் பலவகையான உடல் ஊனங்கள்,சுகாதாரச் சீர்கேடுகள் .
இதை எப்படி சரி செய்ய முடியும் ? மக்களைக் காப்பாற்ற முடியும்?
- அம்மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .ஆனால் இது நடைமுறையில் சாத்தியாமா ? சத்தியமாய் இல்லை.
பின் என்னதான் செய்ய முடியும் ?
- அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய தொழில் நுட்பம் உள்ள, அவர்களது பொருளாதார நிலை ஏற்கக் கூடிய ஒரு நீர்வடிகட்டி (water filter).
அட..இரண்டும் எப்படி முடியும் ?
- முடியும் என சாதித்திருக்கிறார் ஒரு தமிழர்.. ஆம்.. கண்டுபிடித்திருக்கிறார் புதிய /எளிய தொழில் நுட்பத்தில் ஒரு வடிகட்டி .ஆறாயிரம், பத்தாயிரம் என்றிருக்கும் சந்தை நிலவரத்தில் , ஒரு நாள் சம்பள விலையில் ஒரு குடிநீர் வடி கட்டி.. ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் அற்ற குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி ...
இதுமட்டும் உலக எளிய மக்களைச் சென்றடைந்தால் ஒரு தமிழனின் தொண்டுள்ளம் இனம் காணப்படும்.. நாம் தமிழனாய்த் தலை நிமிர்ந்திடுவோம்.. தமிழினம் பெருமை கொள்ளும்
அவரது பலவருட அயராத உழைப்பும் , தன்னலமில்லாச் செயல்பாடுகளும் இப்போழுதுதான் உலக ஊடகங்களின் பார்வைக்கு முன் வந்திருக்கிறது . ஆம் ... ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் செமி பைனல் வரையிலும் அவர் வந்துள்ளார்.